கொக்கு வேட்டை வாலிபர் கைது
கடலுார் : கடலுாரில் கொக்குகளை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வில்லியனுாரைச் சேர்ந்தவர் வினோத், 36; இவர் நேற்று காலை கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கத்தில் வயல்வெளிப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி கொக்குகளை வேட்டையாடினார்.தகவலறிந்த துாக்கணாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வினோத்தை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவரது தந்தை பெயரில் நாட்டுத் துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதும், கொக்குகளை வேட்டையாடியதையும் ஒப்புக் கொண்டார்.உடன், அவரை கடலுார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்து, 4 கொக்குகளை பறிமுதல் செய்தனர்.