உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

புவனகிரி; புவனகிரி போலீசார் ஏழுமலை, கோபிநாத் ஆகியோர் நேற்று காலை 10.00 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புவனகிரி பங்களா அருகில் மேல்புவனகிரி திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன், 25; கையில் கத்தியுடன் அவ்வழியாக சென்றவர்களை பணம் கேட்டு மிரட்டியதுடன், ஆபசாமாக திட்டிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்ப முயன்றனர். அப்போது போலீசாரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத் தார்.ஏழுமலை புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !