தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி
விருத்தாசலம் : விருத்தாசலம், மணலுாரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரபாகரன், 27; இவர், நேற்று மாலை 3:00 மணிக்கு எருமனுார் மணிமுக்தாற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.தண்ணீரில் மூழ்கிய பிரபாகரன் வெளியே வரவில்லை. தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் கிராம மக்கள் சென்று, தடுப்பணையில் சேற்றில் சிக்கியிருந்த பிரபாகரனை மீட்டு, அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.