நெஞ்சு வலியால் வாலிபர் சாவு
கடலுார் : கடலுார் அருகே வாலிபர் திடீர் நெஞ்சுவலியால் இறந்தது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் அடுத்த வழிசோதனைபாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்,32; விவசாயி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டு விட்டு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், குடும்பத்தினர் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.