எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
விருத்தாசலம்: அரியலுார் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வாலிபர் தவறி விழுந்து இறந்தது குறித்து, ரயில்வே இருப்புபாதை போலீசார் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னாட்டான் மகன் முண்டன்சாமி, 21; இவர் தனது நண்பருடன் இன்று (நவ.,11) திருநெல்வேலி – சென்னை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் சென்னைக்கு பயணம் செய்தார். இந்நிலையில், காலை 10:00 மணியளவில் ஈச்சங்காடு – ஆர்.எஸ்.மாத்துார் இடையே ரயில் சென்றபோது, முண்டன் சாமி ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.