உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை

 விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை

திட்டக்குடி: கோழியூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்டக்குடி நகராட்சி, கோழியூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு விளையாட்டு மைதானம் வசதி இல்லை. இதனால் இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விளையாட முடியாமல் அருகிலுள்ள குளத்தில் வாலிபால், இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி, இப்பகுதி இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே, இளைஞர்கள், மாணவர்கள் நலன்கருதி கோழியூரில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை