உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் அருகே முதலை கடித்து வாலிபர் படுகாயம்

சிதம்பரம் அருகே முதலை கடித்து வாலிபர் படுகாயம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே முதலை கடித்து ஒருவர் காயமடைந்தார். சிதம்பரம் அடுத்துள்ள மேல்தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த இளவரசன் மகன் ஜெயச்சந்திரன்,22; இவர், தனது கிராமத்தை சேர்ந்த சிலருடன் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள, பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்தார். அப்போது, ஜெயச்சந்தினை திடீரென முதலை ஒன்று காலில் கடித்து தண்ணீருக்குள் இழுத்துச்சென்றது. அவர் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டும், முதலையை அடித்தும் விரட்டினர். அதையடுத்து, ஜெயந்திரனை விட்டுவிட்டு முதலை தண்ணீருக்குள் சென்றது. உடன் அருகில் இருந்தவர்கள், காயமடைந்த ஜெயச்சந்திரனை மீட்டு, சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவனையில் சேர்த்தனர். இதில், கை மற்றும் கால்களில் 6 இடங்களில் முதலை கடித்து படுகாயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, வனவர் பன்னீர்செல்வம் மற்றும் காப்பாளர்கள் அன்புமணி, ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்தனர். அதனை தொடர்ந்து, முதலை கடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வனத்தறை சார்பில் 25 ஆயிரம் அரசு உதவி தொகை வழங்கப்பட்டது.

3வது முறை சம்பவம்

மேல்தவர்த்தாம்பட்டு பழைய கொள்ளிடம் ஆற்றில், இந்தாண்டில் 3வது முறை முதலை கடி சம்பவம் நடந்துள்ளது. அதில், கடந்த மார்ச் மாதம் அதே பகுதியை சேர்ந்த சாரதி, மே மாதம் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தற்போது, ஜெயச்சந்திரன் முதலை கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் இரும்பு கம்பி பொறுத்திய பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என அப்பகுதியில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதால் சம்பவங்கள் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை