விருத்தாசலம் நகராட்சியில் மண்டல இயக்குனர் ஆய்வு
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் லட்சுமி ஆய்வு செய்தார்.விருத்தாசலத்தில் காட்டுக்கூடலுார் சாலையில் புதிதாக கட்டப்படும் நவீன காய்கறி மார்க்கெட், நாச்சியார்பேட்டை குளம், பெரியவடவாடி உரக்கிடங்கு, புதுப்பேட்டை, தென்கோட்டை வீதி அரசு நடுநிலை பள்ளியில் நடக்கும் கட்டட பணிகள், சேக்கிழார் தெருவில் புதிதாக கட்டப்படும் பூங்கா உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் லட்சுமி நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து, பொன்னேரியில் நவீன எரிவாயு தகன மேடை, அரசு மருத்துவமனை கட்டடம், காந்தி நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ஏ.பி., நகரில் ஒரு லட்சம் கொள்ளளவில் கட்டப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கண்டியங்குப்பம் நுண்ணுயிர் உரக்கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நகராட்சி கமிஷனர் பானுமதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், நகரமைப்பு அலுவலர் செல்வம் உடனிருந்தனர்.