உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்தொப்பூர்,:தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம் சுங்கசாடியில், பாளையம் சுங்கசாவடி நிறுவனம், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு போக்குவரத்துக் கழகம் இணைந்து, வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தியது.தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பேசுகையில், ''சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, மாவட்டம் முழுவதும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. தொப்பூர் சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில், 44 பேர் உயிரிழந்தது மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான விபத்துகள் ஓட்டுனர்களின் கவன குறைவால் ஏற்படுகிறது. ஒருசிலர் செய்யும் தவறால், பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன.''நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதியில், 3 லாரிகள் கவிழ்ந்த விபத்தில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஓட்டுனர்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மூலம், வரும் காலத்தில் தர்மபுரி மாவட்டம் விபத்தில்லா சாலையாக மாற வேண்டும்,'' என்றார்.மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ராஜராஜன், டி.எஸ்.பி., ராஜாசுந்தரம், தேசிய நெடுஞ்சாலைத்துறை குழு தலைவர் ரவி, பிரேக் இன்ஸ்பெக்டர் தரணிதர், தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், பாளையம் சுங்கசாவடி திட்ட அலுவலர் நரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ