சிமென்ட் அட்டை போட்ட வீடுகள் சேதம்தொகுப்பு வீடுகளுக்கு ஏங்கும் இலங்கை தமிழர்கள்
சிமென்ட் அட்டை போட்ட வீடுகள் சேதம்தொகுப்பு வீடுகளுக்கு ஏங்கும் இலங்கை தமிழர்கள்பாப்பிரெட்டிப்பட்டி,: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்கள் வசிக்கும், சிமென்ட் அட்டை தடுப்புகளால் அமைத்த வீடுகள், மிகவும் சேதமாகி உள்ளதால், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், கேசர்குழி அல்லா அணை, மதிகோன்பாளையம், வாணியாறு அணை, நாகவதி அணை, தொப்பையாறு அணை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள, 7 இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.240 குடும்பங்கள்இதில், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை, முள்ளிகாடு பகுதியில் கடந்த, 40 ஆண்டுகளாக, 240 குடும்பங்கள், சிமென்ட் அட்டையை தடுப்புகளாக அமைத்த வீடுகளில் மொத்தம், 724 பேர் வசிக்கின்றனர்.இங்கு, 12 வயதுக்குள், 136 சிறுவர், சிறுமியர் உள்ளனர். அரசால் குடும்ப தலைவருக்கு, 1,500 ரூபாய், உறுப்பினர்களுக்கு, 1,000 ரூபாய், சிறுவர்களுக்கு, 500 ரூபாய் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.அடிப்படை வசதியில்லைஇவர்களுக்கு முகாமில் போதுமான வசதிகள் இல்லை. சிலர் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். கல்வி, மருத்துவம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் இல்லாததால், அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் வசிப்பது நீர்நிலை பகுதிகள் என்பதால், மழைக்காலங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சிமென்ட் அட்டை போட்ட வீடுகள் சேதமடைந்ததால், மழைக்காலங்களில் மழைநீர் வீட்டினுள் ஒழுகி, குடியிருக்க முடியாமல் குழந்தைகளோடு தவிக்கின்றனர். மாற்று வீடுகள் வழங்க கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என, முகாம் மக்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் படிக்கவும், மருத்துவ வசதிகள் பெறவும், நெடுந்தொலைவு செல்லும் நிலை உள்ளது.அரசுக்கு கோரிக்கைமாவட்டத்திலுள்ள, மற்ற இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கு, வேறு இடங்களில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இம்முகாமில் உள்ள மக்கள், தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க பலமுறை கேட்டும், அதிகாரிகள் செவி சாய்க்காமல் உள்ளனர். எனவே, விரைவில் இந்த முகாமில் உள்ள மக்களுக்கு, புதிய தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க, வேண்டு கோள் விடுத்துள்ளனர்.