உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடியரசு தினத்தை முன்னிட்டுதர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டுதர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டுதர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனைதர்மபுரி: -நாடு முழுவதும், 76 வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கபடுகின்றனர். சேலம் - பெங்களூரு மார்க்கத்தில் வந்து செல்லும், 14 தினசரி எக்ஸ்பிரஸ், 8 வாராந்திர எக்ஸ்பிரஸ், 6 பேசன்ஜர், 2 வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் எஸ்.ஐ., சுந்தரராஜன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி முதல் சேலம் மாவட்டம் ஓமலூர் வரையிலான பகுதி யில், 18 ரயில்வே போலீசார், 17 ஆர்.பி.எப்., போலீசார், 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை