சாலையோர ஆற்றில் தொடர் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
சாலையோர ஆற்றில் தொடர் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல் பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக் கிராமத்தில் உள்ள பீனியாற்றின் குறுக்கே, தார் சாலையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப் பாலத்தின் வழியாக மெனசி, பூதநத்தம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும், வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும், பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்கிறது. ஆயிரக்கக்கான மக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பீனி ஆற்றின் குறுக்கே தரைபாலம் வழியாக செல்லும் பொழுது, தரைப்பாலம் ஓரம் தடுப்புச்சுவர் இல்லாததால், இரவில் வருபவர்கள் பலர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். உயிரிழக்கும் நிலை உள்ளது. தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. அதிகாரிகளிடம் தடுப்புச் சுவர் கட்ட வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே உயிர் சேதத்தை தடுக்க இந்த தரை பாலத்தில் தடுப்புச் சுவர் கட்ட அப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.