திறன் மேம்பாடு பயிற்சிக்கு தேர்வு செய்யும்உங்கள் வெற்றி எங்கள் நோக்கம் நிகழ்ச்சி
திறன் மேம்பாடு பயிற்சிக்கு தேர்வு செய்யும்'உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்' நிகழ்ச்சிதர்மபுரி:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், அரசு கலைக் கல்லுாரியில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, மாணவர்களை தேர்வு செய்யும் 'உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்' என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து பேசுகையில், ''தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் இளைஞர்களை ஒருங்கிணைத்து, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த பழங்குடியினர் இளைஞர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம், பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, மாணவர்களை தேர்வு செய்யும், 'உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்' என்ற வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசு ஏற்கிறது,'' என்றார்.தொடர்ந்து, செந்தில்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நடத்தும் அரசு உதவி வக்கீல்கள் நிலை- 2 பதவிக்கான எழுத்துத் தேர்வை கலெக்டர் சதீஸ், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சிவன்அருள் ஆகியோர் பார்வையிட்டனர். விண்ணப்பித்திருந்த, 49 தேர்வர்களில், 42 பேர் நேற்று தேர்வெழுதினர்.இதில், பழங்குடியினர் நல இயக்குனரக இணை இயக்குனர் சுரேஷ், உதவி இயக்குனர் குமரகுருபரன், தர்மபுரி பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.