உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொகுதி பார்வையாளர் வருகை தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தொகுதி பார்வையாளர் வருகை தி.மு.க., ஆலோசனை கூட்டம்

பாலக்கோடு, :பாலக்கோடு, தி.மு.க., மத்திய ஒன்றிய அலுவலகத்தில், தொகுதி பார்வையாளர் வருகை குறித்த ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் நடந்தது.கூட்டத்துக்கு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் நாகராசன், அவைத்தலைவர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பாலக்கோடு தொகுதி பார்வையாளர் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் சரிபார்ப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், அதுகுறித்து, பஞ்., பொறுப்பாளார்களுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பாலக்கோடு தொகுதியில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியினரை ஒருங்கிணைப்பது குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதில், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், ஒன்றிய துணை செயலாளர்கள் ரவி, செந்தில்குமார், பொருளாளர் குமார், சுற்றுச்சூழல் அணி, மாவட்ட தலைவர் செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி