உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பாரப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம்கிடப்பில் போடப்பட்ட ரூ.2.45 கோடியிலான மேம்பாட்டு பணி

பாப்பாரப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம்கிடப்பில் போடப்பட்ட ரூ.2.45 கோடியிலான மேம்பாட்டு பணி

பாப்பாரப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம்கிடப்பில் போடப்பட்ட ரூ.2.45 கோடியிலான மேம்பாட்டு பணிபாப்பாரப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவுக்கு உட்பட்டது பாப்பாரப்பட்டி. இங்கிருந்து பாலக்கோடு செல்லும் சாலையில், 35 ஏக்கர் பரபரப்பளவில் பாப்பாரப்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு ஜெர்தலாவ் பாசன கால்வாயில் இருந்து, தண்ணீர் வருகிறது. இந்த ஏரியை நம்பி, 200 ஏக்கருக்கு மேல், விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், பாப்பாரப்பட்டி ஏரி முழு கொள்ளளவை அடைந்த பின், உபரி நீர் அம்மன் ஏரி, கஞ்சன் ஏரி வழியாக, தர்மபுரி அடுத்த சோகத்துார் ஏரி, ராமக்காள் ஏரிக்கு உபரி நீர் செல்வது வழக்கம். மேற்கண்ட ஏரிகளை நம்பி, 1,000 ஏக்கருக்கு மேல், விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.இந்நிலையில் ஆக்கிரமிப்பால், பாப்பாரப்பட்டி ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டாத நிலை தொடர்ந்தது. மேலும், ஏரியில் பாப்பாரப்பட்டி டவுன் பஞ்., குடியிருப்புக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலந்தது. இதை தடுத்து, பாப்பாரப்பட்டி ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், பாப்பாரப்பட்டி ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கரையை பலப்படுத்துவது, நடைபாதை, மின்விளக்கு அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக, 2.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஏரிக்கரையில் இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியின் போது, அருகே வசித்து வருபவர்கள், தற்போது ஏரி பகுதியில் செல்லும் சாலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஏரி மேம்பாடு பணி நிறுத்தப்பட்டது.டவுன் பஞ்., கமிஷ்னர் உள்ளிட்டோர் பாப்பாரப்பட்டி ஏரியை ஆய்வு செய்து, நிறுத்தப்பட்ட பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணாமல், ஏரி மேம்பாட்டு பணியை ஓராண்டுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ளனர். ஏரியில், கழிவுநீர் நேரடியாக கலந்து வருவதுடன், ஆகாய தாமரையும் அதிகளவில் வளர்ந்து, ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கோடு ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் பாப்பாரப்பட்டி ஏரியில் நேரடியாக சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும், ஆகாய தாமரையை அகற்றவும், கிடப்பில் போடப்பட்டுள்ள பாப்பாரப்பட்டி ஏரி மேம்பாட்டு பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ