மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025
மாநில சிலம்பம் போட்டி அரசுபள்ளி மாணவி சாதனைகடத்துார்: மாநில அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டி மயிலாடுதுறையில் நடந்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாணவியர் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டம் சார்பில், கடத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2, பயிலும் மாணவியர் அமிர்தயாழினி,17; ஓவியா,17. ஆகியோர் பங்கேற்றனர்.அமிர்தயாழினி ஒற்றைக்கொம்பு வீச்சில் மாநில அளவில் முதல் பரிசு பெற்று தங்க பதக்கத்தை வென்றார். இதையடுத்து, அவருக்கு பள்ளியில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியை அழகம்மாள் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சங்கீதா சரவணன், அருணா, கார்த்திக்,பெருமாள், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, மாணவியை பாராட்டி, 5,000 ரூபாய் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவியர்கள் பங்கேற்றனர். ஆசிரிைய கல்யாணி நன்றி கூறினார்.
23-Jan-2025