மேலும் செய்திகள்
அரசு மாணவியர் விடுதிகளில் பொங்கல் பண்டிகை போட்டி
13-Jan-2025
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்குபாப்பிரெட்டிப்பட்டி,: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், தர்மபுரி மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு இணைந்து, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கல்லுாரி முதல்வர் ரவி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள கலை மற்றும் கல்வியில் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, நாடகம், நடனம், மீம்ஸ் குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் பேசினார்.அப்போது அவர், கல்லுாரியின் பொன்னான காலத்தை கல்வியில் செலுத்த வேண்டும். தவறான பாதையில் மாணவர்கள் செல்லக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.போதை பொருள் விழிப்புணர்வு குறித்து நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஐயப்பன், ஜெயராமன், நுாலகர் கல்யாணி, உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
13-Jan-2025