உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல் காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர்வரத்து அருவிகளில் குளிக்க தடையால் ஏமாற்றம்

ஒகேனக்கல் காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர்வரத்து அருவிகளில் குளிக்க தடையால் ஏமாற்றம்

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில், 25,000 ஆயிரம் கன அடி நீர்வரத்தால், காவிரி-யாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்-துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பிய நிலையில், தமி-ழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 5,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 16,523 கன அடி என, 21,523 கன அடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை, 6:00 மணிக்கு, 25,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது.இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரிப்பால் அரு-விகள், காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று தடை விதித்தது. இதனால் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம-டைந்தனர். ஒரு சிலர் தடையை மீறி, ஆற்றங்கரையோரத்தில் குளித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ