உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

அரசு பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த நல்லகுட்லஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தர்மபுரி ரோட்டரி சங்கம் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சென்னகிருஷ்ணன் தலைமை வகித்தார். கடத்துார் கிளை நுாலக நுாலகர் சரவணன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் அப்பாவு, சுப்பிரமணியன், வரதராஜன், அல்லி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு மற்றும் எழுது பொருட்களை ரோட்டரி சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் தென்னரசு ஆகியோர் வழங்கினர். வட்டார கல்வி அலுவலர் பச்சியப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ