உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பணியாளர் சங்கத்தினர் கறுப்பு சட்டை ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் கறுப்பு சட்டை ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் கறுப்பு சட்டை ஆர்ப்பாட்டம்தர்மபுரி:தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில், கறுப்பு சட்டை அணிந்தபடி, பணியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பேசியதாவது:தமிழக அரசு, அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுபவர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு, நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும்.சாலை பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்து, அனைத்து மருத்துவமனைகளிலும், அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு, 5 வருடங்களுக்கு ஒரு முறை, 5 சதவீதம் ஓய்வூதியத்தை அதிகரித்து வழங்க வேண்டும். குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும்போது சரியான எடையில் பொருட்களை அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி