உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மத்திய அரசை கண்டித்து நாளைதி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நாளைதி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நாளைதி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: 100 நாள் வேலை உறுதி திட்டம் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய, 4,034 கோடி நிதியை வழங்காமல், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும், பா.ஜ., அரசை கண்டித்து அனைத்து ஒன்றியங்களிலும் நாளை (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஊத்தங்கரை வடக்கு, மத்திய, தெற்கு ஒன்றியம், மத்துார் வடக்கு, தெற்கு ஒன்றியம், பர்கூர் வடக்கு, தெற்கு ஒன்றியம், போச்சம்பள்ளி ஒன்றியம், காவேரிப்பட்டணம் கிழக்கு, மேற்கு ஒன்றியம், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, ஒன்றியம் ஆகியற்றில் நடக்கிறது. காலை, 10:00 மணியளவில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை