மேலும் செய்திகள்
பெண்களுக்கு நலத்திட்ட உதவி
15-Mar-2025
ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில்இலவசமாக தங்கி படிக்க தேர்வுஊத்தங்கரை:ஊத்தங்கரை கிராம மக்கள் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில், உடல் ஊனமுற்ற குழந்தைகள், பெற்றோர் இல்லாத குழந்தைகள், இலவசமாக விடுதியில் தங்கி படிக்க நேர்முக தேர்வுக்கான முகாம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.முகாமிற்கு கிராம மக்கள் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணி தலைமை வகித்தார். முகாமில், 150 குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். இதில், தகுதி வாய்ந்த, 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தங்கும் விடுதி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது என, தெரிவிக்கப்பட்டது. அறக்கட்டளையின் பொருளாளர் சித்ரா நன்றி கூறினார்.
15-Mar-2025