அரசு கல்லுாரியில் உலக சுகாதார தின விழா
அரசு கல்லுாரியில் உலக சுகாதார தின விழாநாமக்கல்:நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில் உலக சுகாதார தின நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். எர்ணாபுரம் அரசு மருத்துவமனை, ஆயுஷ் சித்த மருத்துவ அலுவலர் பூபதிராஜா, 'உணவே மருந்து' என்ற தலைப்பில் பேசுகையில், ''ஒவ்வொரு மாணவ, மாணவியரும் உடல் நலம் பேணுவதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து, அன்றைய நாளுக்குரிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும். அறுசுவை உணவை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களுக்கு தர்பூசணி பழம், உலக சுகாதார தின துண்டு பிரசுரம், மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.