உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளிக்க அறிவுறுத்தல்

குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளிக்க அறிவுறுத்தல்

குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளிக்க அறிவுறுத்தல்நல்லம்பள்ளி:குடிநீர் தட்டுப்பாடு குறித்து, பொதுமக்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என, நல்லம்பள்ளி பி.டி.ஓ., தெரிவித்துள்ளார்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பி.டி.ஓ.,வாக பணியாற்றிய கலைவாணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தர்மபுரி டி.ஆர்.டி.ஏ.,வில் வீடு கட்டும் திட்டத்தில், பி.டி.ஓ., வாக இருந்த, நந்தகோபால் நல்லம்பள்ளி பி.டி.ஓ., (கி.ஊ) ஆக நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார். குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளிப்பது குறித்து அவர் கூறுகையில், ''நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. எனவே, குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும், ஒகேனக்கல் கூட்டு குடிநீரை தேவையான அளவிற்கு வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், பொதுமக்கள் தாயக்கமின்றி பஞ்., செயலாளர் மற்றும் பி.டி.ஓ., அலுவலகத்தில் உடனடியாக புகார் அளித்தால், உடனடியாக தீர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ