உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அபாயகரமான நிலையில் சமுதாயக்கூடம் இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

அபாயகரமான நிலையில் சமுதாயக்கூடம் இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

காரிமங்கலம்: அபாயகரமான நிலையிலுள்ள சமுதாயக்கூடத்தை இடித்து அப்புறப்படுத்த, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், கோவிலுார் பஞ்.,ல் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதன் அருகில், சமையலறை, கழிவறை மற்றும் குடிநீர் தேவைக்காக, ஆழ்துளை கிணறு அமைத்து, மினி சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட்டது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தரமற்ற கட்டுமான பணிகளால் கட்டடம், 10 ஆண்டுகளில் சேதமடைந்து, உள்பக்க கான்கிரீட் கூரையின் சிமென்ட் கலவை பெயர்ந்து விழுகின்றன. சுற்றுச்சுவர்கள் ஆங்காங்கே உடைந்து சேதமடைந்துள்ளது. எந்த நேரத்திலும் கட்டடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதை பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.இதனால் அது, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. பயன்பாடின்றி, அபாயகரமான நிலையிலுள்ள, சமுதாய கூடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்ட, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ