விவசாயிகளுக்கு மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியில், வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், விவசாயிகளுக்கு மழை நீர் சேகரிப்பு முறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மழைநீர் சேகரிப்பு குறித்த முறைகள், தடுப்பணைகள் அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், கோடை உழவு, நீர் உபயோகம் மற்றும் பயிர் விளைச்சல் உற்பத்தி குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கி கூறினர். முகாமில், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் அறிவழகன், உதவிப் செயற்பொறியாளர் நிர்மலதா, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.