உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொப்பூர் கணவாயில் விபத்தை தடுப்பதற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை

தொப்பூர் கணவாயில் விபத்தை தடுப்பதற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை

தர்மபுரி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரியை இணைக்கும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாக ஓசூர், தர்ம-புரி, சேலம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்-சாலை என்.எச்.,44 உள்ளது. இச்சாலையின், தர்-மபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். தொப்பூர் மலைப்பாதையில் முதல் கட்டமாக, 4 வழிச்-சாலை அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலத்துக்கு, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. குறிப்பாக, தொப்பூர் மலைப்பாதையில், 8 கி.மீ., துாரத்துக்கு தாழ்வாகவும், வளைவாகவும் அமைக்கப்பட்ட சாலையால் அடிக்கடி விபத்தால் பல உயிர்பலி ஏற்பட்டது. இதை தடுக்க தொப்பூர் மலைப்பாதையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க, தர்மபுரி முன்னாள் எம்.பி.,க்கள் அன்புமணி, செந்தில்குமார் ஆகியோர் தொடர்ந்து, மத்திய அரசை வலியு-றுத்தி வந்தனர். இதையடுத்து, தொப்பூர் மலைப்-பாதையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசு, 775 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டது. உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ள, தொப்பூர் மலைப்பாதை கட்டமேட்டில் இருந்து, 6.60 கி.மீ., துாரம் வரை, 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோதனை செய்ய, தேசிய நெடுஞ்சா-லைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இப்-பணி தொப்பூர் மலைப்பாதையில் தொடங்கி நடந்து வருகிறது. மண் பரிசோதனையின் போது, 36 பாராமீட்டர் அளவுக்கு மலைப்பாதையில் துளையிட்டு, மண் பரிசோதனை செய்யப்படும் என, மண் பரிசோதனையில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். மண் பரிசோதனை முடிந்த பின், தொப்பூர் மலைப்பாதையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பில்லர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பாலம் அமைக்கும் பணி ஒவ்வொரு கட்ட பரிசோத-னைக்கு பின், தரமாக அமைக்கப்படும் என்றும், பாலம் பணி, தொடங்கிய நாளில் இருந்து, மூன்-றாண்டுகளில் முடிக்கப்படும் என்றும் நெடுஞ்சா-லைத்துறையினர் தெரிவித்தனர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி