விற்பனைக்கு மது பாட்டில் கடத்திய பெண் கைது
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் காரிமங்கலம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பேகாரஹள்ளி பஸ் ஸ்டாப் பகுதியில் நின்றிருந்த, பென்னாகரம் அடுத்த பிக்கிலி புதுகரம்பு பகுதியை சேர்ந்த, தனலட்சுமி, 36, என்பவர் பையில் மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த, 30 மது பாட்டில்களை காரிமங்கலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.