சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கை
சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கைநல்லம்பள்ளி, :தர்மபுரி அடுத்த, இருசன்கொட்டாயில் பூட்டப்பட்டுள்ள நிலையிலுள்ள சுகாதார வளாகத்தை திறக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஹள்ளி பஞ்.,ல், உள்ளது இருசன்கொட்டாய். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், பொதுமக்களுக்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இது, சில மாதங்கள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது பூட்டப்பட்டுள்ளது. இதனால், இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலை உள்ளது. எனவே, இருசன்கொட்டாய் கிராமத்தில் பூட்டப்பட்ட நிலையிலுள்ள இந்த சுகாதார வளாகத்தை திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, கோரிக்கை எழுந்துள்ளது.