மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
'வில்லங்கமாக விளையாடிய' உடற்கல்வி ஆசிரியர் கைது
29-Jan-2025
அரசு பள்ளியில் ஆண்டு விழாபாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்வினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், நடப்பாண்டில் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சுகந்தி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டில் மாணவர்களின், 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து, பரிசுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
27-Jan-2025
29-Jan-2025