மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
07-Feb-2025
போதைபொருள் தடுப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சிபாலக்கோடு:பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பாலக்கோடு உட்கோட்ட சரகம் சார்பில், போதைபொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் அன்பரசன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தீர்த்தலிங்கம் தலைமை உரையாற்றினார். பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் கல்லுாரி மாணவ, மாணவியரிடையே போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாவதால், அதை தடுப்பது குறித்தும் எடுத்துரைத்தார்.மேலும், போதைபொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற, இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார். இதில், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், எஸ்.ஐ., கோகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியை அனிதா நன்றி கூறினார்.
07-Feb-2025