சேலத்தில் இந்திய மாணவர்சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் இந்திய மாணவர்சங்கம் ஆர்ப்பாட்டம்சேலம், :இந்திய மாணவர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான, தேடுதல் குழுவை கவர்னர் நியமிப்பார் என்ற யு.ஜி.சி.,யின் புதிய அறிவிப்பை கண்டித்தும், மாநில உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், நேற்று அஸ்தம்பட்டி தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பவித்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.