தொழிலாளி தற்கொலைஉறவினர்கள் சாலை மறியல்
தொழிலாளி தற்கொலைஉறவினர்கள் சாலை மறியல்பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகேயுள்ள நெருப்பூரை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தராஜ், 35. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது. பொன்னுசாமி ஏரியூர் போலீசில் புகார் அளித்தார்.இது தொடர்பாக, கோவிந்தராஜ் அவரது தந்தை முத்துசாமி ஆகியோரை, நேற்று முன்தினம் ஏரியூர் போலீசார் விசாரித்தனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு கோவிந்தராஜ் அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏரியூர் போலீசார் கோவிந்தராஜனின் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.இந்நிலையில், கோவிந்தராஜ் சாவில் மர்மம் மற்றும் போலீசுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் நேற்றிரவு, 9:00 மணிக்கு பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர். பென்னாகரம் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், எஸ்.ஐ., ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.