உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலிகிருஷ்ணகிரி:திருப்பத்துார் மாவட்டம், கீழ்பனந்தோப்பை சேர்ந்தவர் சின்னதம்பி, 43, கூலித்தொழிலாளி. இவர் கடந்த பிப்., 18ல், ஓதிக்குப்பம் கூட்ரோடு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக, யமஹா பாசினோ ஸ்கூட்டரில் சென்றவர் மோதியதில் படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். விபத்து குறித்து, கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ