சேதமான மின்தகன மேடைசீரமைக்க மக்கள் கோரிக்கை
சேதமான மின்தகன மேடைசீரமைக்க மக்கள் கோரிக்கைபாலக்கோடு:பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என, அனைத்து தரப்பினரும் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய மின்தகன மேடை வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, தீர்த்தகிரி நகர், தக்காளி மார்க்கெட் அருகில், 2020- - 2021ல், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மின்தகன மேடையை பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் அடிக்கல் நாட்டி, பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அதை, சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மின்தகன மேடையில் அமைக்கப்பட்ட தரமற்ற இயந்திரங்கள் மற்றும் பராமரிப்பின்மையால், கடந்த, 3 ஆண்டுகளாக பயன்பாடின்றி, மின்தகன மேடை கட்டடம் மது பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், இறந்தவர்களின் சடலத்தை மின் தகன மேடையில் அடக்கம் யெ்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சேதமான மின்தகன மேடை இயந்திரங்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.