பணி நிரந்திரம் கோரி டாஸ்மாக்கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்திரம் கோரி டாஸ்மாக்கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்தர்மபுரி:தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்க கவுரவ தலைவர் அதிபதி தலைமை வகித்தார்.இதில், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்ற, தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். கேரளாவில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக, 50,000 ரூபாய் வழங்குவது போல், தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம், 50,000 ரூபாய் வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருபவர்களுக்கு, சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில், மாவட்ட தலைவர் தினகரன், செயலாளர் மணி, ஒருங்கிணைப்பாளர் முருகன் உட்பட பலர் பல்கேற்றனர்.