குறை மின்னழுத்த பிரச்னையை தீர்க்க1,974 டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி
குறை மின்னழுத்த பிரச்னையை தீர்க்க1,974 டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகிருஷ்ணகிரி:பர்கூர், போச்சம்பள்ளி, மத்துார், ஓசூர், சூளகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் விவசாயிகள், தொழில்முனைவோருக்கு மோட்டார்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் சரிவர இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டத்தில் குறை மின்னழுத்தம் உள்ள பகுதிகளில், 1,974 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், யுனிவர்சல் கேபிள் நிறுவனம் இந்த டெண்டரை, 80 கோடி ரூபாய் மதிப்பில் எடுத்துள்ளது. இதையடுத்து நேற்று, கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டி பஞ்., இட்டிகல் அகரத்தில் குறைந்த மின்னழுத்த முள்ள பகுதிகளில், மின் வினியோகத்தை சீர்செய்யும் வகையில், இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமை வகித்து, டிரான்ஸ்பார்மர் சேவையை துவக்கி வைத்து, இப்பணிகள் அனைத்தும், ஒன்றரை ஆண்டுகளில் முடியும் என்றார்.ஆர்.டி.எஸ்.எஸ்., திட்ட செயற்பொறியாளர் வேலு, உதவி செயற்பொறியாளர் அம்பிகா, கிருஷ்ணகிரி மின் பகிர்மான செயற்பொறியாளர் பவுன்ராஜ், உதவி செயற்பொறியாளர் சிதம்பரம், உதவி பொறியாளர் சேகர், யுனிவர்சல் கேபிள் நிறுவன திட்ட மேலாளர் சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.