உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்தர்மபுரி, அக். 22-தர்மபுரி மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். இதில், மருத்துவ ஊழியர்களுக்கு மாத ஊதியமாக தற்போது, 5,500 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை மாதம், 10,000 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும். மாத ஊதியம், மிகவும் தாமதமாக, மாதந்தோறும், 7ம் தேதிக்கு மேல் வழங்கப்படுகிறது. இதை, மாதம், 5ம் தேதிக்குள் கட்டாயம் வழங்க வேண்டும். 2 மணி நேர வேலை என பணியமர்த்தி, தற்போது, 8 மணி நேரத்திற்கும் மேலாகவும், பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களிலும் வேலை வாங்குவதை, பணி வரன்முறை படுத்த வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும், மகப்பேறு கால ஊதியத்துடன் விடுப்பு, தற்செயல் விடுப்பு மற்றும் தேசிய பண்டிகை விடுமுறையில் பணிக்கு வர நிர்பந்திக்கக் கூடாது, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ