தொழிலாளி மர்மச்சாவு
தொழிலாளி மர்மச்சாவுபாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த மணியம்பாடியை சேர்ந்தவர் தங்கராஜ், 52. கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 4ல் அப்பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது, குடிபோதையில் இருந்தவர், அப்பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடை பாலத்தின் மீது படுத்திருந்தார். நேற்று முன்தினம் காலை அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.