உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்புபாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டி கல்லாத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, 65. கூலித்தொழிலாளி. இவருக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வசிக்கின்றனர். லட்சுமி மட்டும் தனியாக வசிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த லட்சுமியை, மர்ம நபர்கள் தலையில் தாக்கியதில் மயக்கமடைந்தார். அப்போது மர்ம நபர்கள் லட்சுமி காதில் இருந்த, 2 தோடு, ஒரு மூக்குத்தி என ஒரு பவுன் நகையை பறித்துச் சென்றனர். மயக்கம் தெளிந்து லட்சுமி புகார் படி அ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை