உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவிலில் சிலை திருட்டு

கோவிலில் சிலை திருட்டு

கோவிலில் சிலை திருட்டுகம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான தேசநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் ஐம்பொன் சிலையை திருட முயன்றனர். ஆனால், கருவறையை திறக்க முடியாததால், ஏமாற்றமடைந்த அவர்கள் கோவிலில் இருந்த, ஒன்றரை அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன, மாணிக்கவாசகர் சிலையை எடுத்துச் சென்றனர். மேலும், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து,கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை