உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டுதர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், கடந்த வாரம் ஆண்டு விழா நடந்தது. அதில், 5-ம் வகுப்பு மாணவியர்களான ஸ்ருத்திகா, பவுனம்மாள், மகாலட்சுமி ஆகியோர் எழுதிய, 'கையெழுத்து பிரதி நுால்கள்' வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இது குறித்த செய்தி, நம் 'காலைக்கதிர்' நாளிதழில் ஏப்., 1 அன்று வெளியானது. இதையறிந்த, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று முன்தினம் மாணவியரை நேரில் வரவழைத்து, மாணவ, மாணவியர் சிறு வயதில் படைப்பாற்றலுடன் வளர்வது வரவேற்கத்தக்கது என, குறிப்பிட்டு மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்றல், பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன், குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ