மேலும் செய்திகள்
100 பவுன் கொள்ளை நடந்தவீட்டில் டி.ஐ.ஜி., விசாரணை
10-Mar-2025
ஆசிரியை வீட்டில் 100 பவுன் நகை திருட்டு
09-Mar-2025
நல்லம்பள்ளி அருகேதேர் இழுப்பதில் தகராறுதர்மபுரி:நல்லம்பள்ளி அருகே, தேர் இழுப்பதில் தகராறு ஏற்பட்டு, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின், தேரோட்டம் நடந்தது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டி பஞ்.,க்குட்பட்ட மத்தனம்பட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத வருடாந்திர தேர்திருவிழா, கடந்த மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மன் உள்ளூர் வருதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 3-ல் அம்மன் பெரியதேர் நிலை பெயர்த்தலும், நேற்று பங்குனி மாத பெரியதேர் இழுத்தலும் தொடங்கியது.அப்போது, வழக்கமாக தேர் இழுக்கும் பாதையில் நெல் பயிரிடப்பட்டிருந்ததால், தேரை அவ்வழியாக இழுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினர் மாமுல் வழிதடத்தில் தான், தேரை இழுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு நில உரிமையாளர்கள், நெல் வயலில் தேரை இழுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதால், நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் மற்றும் தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் தலைமையிலான போலீசார் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், நெல் வயலில் தேர் இழுக்க அனுமதிக்க முடியாது. மாற்று பாதையில் தேரை இழுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை, விழாக் குழுவினர் ஏற்றுக்கொண்டதால், 3 மணி நேரத்திற்கு பின், மீண்டும் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
10-Mar-2025
09-Mar-2025