உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கலைக்கல்லுாரியில் விளையாட்டு விழா

அரசு கலைக்கல்லுாரியில் விளையாட்டு விழா

அரசு கலைக்கல்லுாரியில் விளையாட்டு விழாதர்மபுரி:தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் நேற்று, 2024 - 2025ம் கல்வி ஆண்டுக்கான, விளையாட்டு விழா, கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ )விஜயா தலைமை வகித்தார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார். தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன், தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 22 துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, விளையாட்டு போட்டியை எஸ்.பி., மகேஸ்வரன் துவக்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். விளையாட்டு விழாவில் பங்கேற்ற, 22 துறைகளை சேர்ந்த, 4,000 வீரர், வீராங்கனைகளில் வரலாற்றுத்துறை வீரர், வீராங்கனைகள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். மாணவ செயலாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !