உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரியில் முழ்கி தொழிலாளி பலி

ஏரியில் முழ்கி தொழிலாளி பலி

ஏரியில் முழ்கி தொழிலாளி பலிதர்மபுரி:பாலக்கோடு அருகே, ஏரியில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலம், -24 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, தொம்பகாரம்பட்டியை சேர்ந்த விக்னேஷ், 28. வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் தர்மன், 35. இருவரும் தனியார் போர்வெல் வாகனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம், தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால், பாலக்கோடு அருகே உள்ள சோமனஹள்ளி ஏரிக்கு இருவரும் குளிக்கச் சென்றனர். அப்போது, விக்னேஷ் நீரில் மூழ்கினார். அங்கு வந்த பாலக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அன்று மாலை முதல், ரப்பர் படகு மற்றும் அதிநவீன கேமராக்களை கொண்டு சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று விக்னேஷ் சடலத்தை மீட்டனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !