உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்சாரம் தாக்கி மாணவர் சாவு

மின்சாரம் தாக்கி மாணவர் சாவு

இண்டூர், இண்டூர் அடுத்த, அதகபாடி சிவசுப்பிரமணிய நகரை சேர்ந்த மஞ்சுநாத், 19, ஆட்டுகாரம்பட்டியிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 11 அன்று மஞ்சுநாத் அவர்களுடைய விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது, மின்சாரம் தாக்கி, ஆடைகள் தீப்பிடித்து, பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மஞ்சுநாத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் பின், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர், நேற்று முன்தினம் மதியம், 1:05 மணிக்கு உயிரிழந்தார். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ