மேலும் செய்திகள்
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சேதம்
24-Oct-2025
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், கடந்த, 22ல் வடகிழக்கு பருவமழையால் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அரூர் அடுத்த கோட்டப்பட்டி, சிட்லிங், தீர்த்தமலை, வீரப்பநாயக்கன்பட்டி, பாளையம், கூடலுார், மாம்பாடி, மாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், சாலைகள் சேதமடைந்தது. அதே போல், திருவண்ணாமலை-அரூர் (வழி) தானிப்பாடி நான்குவழி சாலையில், மோட்டூரில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது போல், பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. எனவே, சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் தரைப்பாலங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Oct-2025