உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பிரெட்டிப்பட்டி ஜி.ஹெச்., முன் தேங்கும் குப்பையால் சுகாதார கேடு

பாப்பிரெட்டிப்பட்டி ஜி.ஹெச்., முன் தேங்கும் குப்பையால் சுகாதார கேடு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை வளாகம் முன், தேங்கும் குப்பையால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவம-னைக்கு தினமும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதால், இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மருத்துவமனை வளாகம் முன், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் கடுமையான துர்-நாற்றம் வீசுவதோடு, சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. மேலும், அதி-களவு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. எனவே மருத்துவ-மனை வளாகம் முன் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, சுகாதார பணிகளை மேற்கொள்ள, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ