உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுதானியங்கள் விழிப்புணர்வு

சிறுதானியங்கள் விழிப்புணர்வு

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தனியார் கல்லுாரியில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில், சிறுதானியங்கள் விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடந்தது.இதில், கலைக்குழுவினர் தாரைத்தம்பட்டை முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் தொடர்ச்சியாக தெருக்கூத்து மூலம் சிறுதானியங்கள் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறுதானியங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா பேசினார். சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி