சாலை விரிவுபடுத்தும் பணியால் 160 வீடுகள் பாதிப்பதாக புகார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேன்-கனிக்கோட்டை அடுத்த அக்கொண்டபள்ளியை சேர்ந்த வெங்க-டேஷப்பா என்பவர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:தேன்கனிக்-கோட்டை, அக்கொண்டப்பள்ளி கிராமம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதாக கூறி, சாலையின் இருபுறமும், 15 மீ., அளவீடு செய்துள்ளனர். இதனால், அக்-கொண்டபள்ளி கிராமத்தில், 160 வீடுகளும், விவசாய நிலமும் பாதிக்கப்படும். இதனால் ஏழை மக்கள் பாதிப்புக்கு ஆளா-வார்கள்.ஓசூரில் இருந்து வரும் நெடுஞ்சாலை, அக்கொண்டபள்ளி வரை விரிவு படுத்தவில்லை, அதேபோல், அக்கொண்டபள்ளியை தாண்டிய பிறகும் விரிவுபடுத்தவில்லை. இந்நிலையில் இப்பகு-தியில் மட்டும் சாலை விரிவுபடுத்துவதாக கூறி, நில அளவீடு செய்துள்ளனர். வாகன நெரிசல் இல்லாத இந்த நெடுஞ்சா-லையை விரிவுபடுத்துவதால் எந்த பயனும் இல்லை. மாறாக ஏழை விவசாய குடும்பங்கள் பாதிப்பர். எனவே, இந்த சாலை விரிவுபடுத்தும் பணியை கைவிட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.